
கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய சித்ரா ஜெயா டிவி, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையை அடுத்த நசரத் பேட்டையில் தனியார் விடுதியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவரும் நிலையில், சித்ரா தற்கொலைக்கு கணவர் , தாயார் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே முக்கிய காரணம் தெரிவித்துள்ளனர்.
சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குருஞ்செய்திகள் அழிக்கப்பட்டு உள்ளதாக செல்போன் ஆய்விற்கு அனுப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]