2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

அமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். படத்தின் பாடல் வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது படக்குழு.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோக்கள் சிலவற்றை படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர்.இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காட்டுப்பயலே பாடலின் வீடியோ தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.