தொலைக்காட்சியில் அறிமுகமாகி பிரபலமான மால்வி மல்ஹோத்ரா தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் ஹோட்டல் மிலன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் யோகேஷ் சிங் நேற்று இரவு 9 மணி அளவில்bஇவரை கத்தியால் குத்தியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் யோகேஷ் மால்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் கத்தியால் மால்வியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மால்வி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். மேலும் காவல்துறையினர் இவ்விவகாரத்தில் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

[youtube-feed feed=1]