சென்னை: தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. அதுதொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது.
நீட் தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதல் தேர்வில் தோற்று, 2வது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசு மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.