Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மகாளய அமாவாசை: ராமேஸ்வரம், காவிரி, தாமிரபரணி உள்பட நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்கதடை…

Sep 16, 2020

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி, நாளை நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்யவோ, குளிக்கவோ கூடாது என தமிழகஅரசு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்துக்களின் முக்கிய விரத நாளான மகாளய அமாவாசை நாளை நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இந்நாளில், மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கமாகும்.

தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த ஸ்தலமாக ராமேஸ்வரம்  கூறப்படுகிறது. அங்கு கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, அக்னி தீர்த்தம் உள்பட அனைத்து தீர்த்தங்களில் நீராடுவது வழக்க மான நடைமுறை.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரை,  ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்யவோ, குளிக்கவோ கூடாது என தமிழகஅரசு தடை விதித்துள்ளது.

ராமேஸ்வரத்தில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கவோ, அக்னி தீர்த்தத்தில் நீராடவோ கூடாது என்று தடைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, ஸ்ரீரங்கத்திலும் படித்துறையில் நிதி கொடுக்க தடை போடப்பட்டுள்ளது.

மேலும்,  நெல்லை மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில்  ஆற்று படித்துறையில் தர்ப்பணம் செய்யவோ,   குளிக்கவோ தடை விதிக்கப்பட்டஉள்ளது.

மேலும், நெல்லை மாநகர பகுதி களில் குறுக்குத்துறை முருகன் கோவில், பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, திருப்புடை மருதூர் படித் துறை, முக்கூடல் ஆறு உள்பட  நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளது.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பொதுமக்கள் நீராடி தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடலுக்கு மக்கள் வருவதை தடுக்க போலீசார் மூலம் தீவிர கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது. வழக்கமாக புரட்டாசி மகாளய அமாவாசைக்கு கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பிரச் சினை காரணமாக அது தடைபட்டுள்ளது.

 கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், கிள்ளை கடற்கரை, மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாறு, வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு, விருத்தாசலம் மணிமுக்தாறு என்று மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீர் நிலை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை, கொடுமுடி மற்றும் காவிரி, பவானி ஆற்றங்கரைகளில் உள்ள புனித- புண்ணியதலங்களில் பொதுமக்கள் கூடி திதி, தர்பண பூஜைகள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவு பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்யவோ, குளிக்கவோ கூடாது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. மேலும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

கல்லூரி மாணவர்களின் அரியர் ரத்து வழக்கு: தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சட்டசபையில் இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல்…

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer