ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படத்திற்கு ‘நோ என்ட்ரி’ என பெயரிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் மிரட்டலான முதல் பார்வை(First look) தற்போது வெளியாகியுள்ளது.
அஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
நடுகாட்டில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு இருக்கும் ஆண்ட்ரியாவும் அதைச்சுற்றி வேட்டை நாய்கள் காத்திருப்பது போல் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.