பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்த நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவரின் மகன் எஸ்.பி சரண் பேட்டி அளித்துள்ளார். அதில், எஸ்.பி.பி உடல் நிலை முன்னேற்றம் அடைந்து உள்ளது. திங்கள் கிழமை (இன்று) நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறேன். நல்ல செய்திக்காக காத்து இருக்கிறேன், என்று எஸ். பி சரண் குறிப்பிட்டு இருக்கிறார்.
SPB's son @charanproducer claims that his father is doing well and COVID19 negative but still on ventilator.
Hospital has still not given any update. pic.twitter.com/zQ5r84kJw8
— Pramod Madhav (@PramodMadhav6) September 7, 2020
ஆனால் இவரின் நுரையீரலில் இன்னும் தொற்று சரியாகவில்லை. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இவர் முழு நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.