கொரோனா மற்றும் பொதுமுடக்கத்தால் வெளிநாடு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வண்ணம் தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிற் நிறுவனங்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் வகையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் மின்னணு துறைக்கான புதிய தொழிற்கொள்கையை முதல்வர் பழனிசாமி , சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார்.
அதில், முதலீடுகளை ஈர்க்க மின்னணு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் பல வெளிநாடுகளில் வெளியேறும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க புதிய தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.