பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூர், மோனா கபூர் தம்பதிகள் மகன் அர்ஜூன் கபூர். இவர் இந்தியில் நமஸ்தே இங்கிலாந்து, ஜீரோ, பானிபட் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அர்ஜூ னுருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டி ருக்கிறது,
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் மெசேஜில்,’எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதை சொல்ல வேண்டியது எனது கடமை. நான் நான் நன்றாக இருக்கிறேன். நான் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டிருக்கிறேன். டாக்டர்கள் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களின் ஆதரவுக்கு முன்னதாகவே நன்றி. இனி வரும் நாட்களில் எனது நிலை பற்றிய அப்டேட்கள் நானே தருவேன். இதுவொரு அசாதரணமான நேரம். இந்த வைரஸ் தொற்றிலிருந்து மனித நேயத்துடன் நாம் அனைவரும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அர்ஜூன் கபூர் கூறி உள்ளார்.
ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், அப்பிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் போன்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.