’தும்பா ’படத்தில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியன் மகள். அடுத்து ’ஹெலன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. லாக்டவுனில் சென்னையிலிருந்து தனது கிராமத்து வீட்டுக்கு சென்று தங்கி வீட்டு வேலை யோடு வயல் வேலையும் செய்துக் கொண்டிருக்கிறார். வயலில் இறங்கி நாற்று நடுவது முதல் டிராக்டரில் நிலத்தை உழுது வரை எல்லா வேலையும் கீர்த்திக்கு அத்துப்படி.


சில தினங்களுக்கு முன் கீர்த்தி வீட்டுக்கு அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று வந்தது. சுற்றுசுவர் வளாகத்தின் ஓரத்தில் தண்ணீர் குழாய்க்கு அடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்த பாம்பை கண்டதும் வீட்டிலிருந்தவர்கள் பயந்தனர். அதை அடித்து விரட்ட முயன்றனர். ஆனால் கீர்த்தி அவர்களை தடுத்து பயப் படாமல் லாவகமாக பாம்பை கையிலி ருந்த குச்சியால் பிடிக்க முடிவு செய்தார். சத்தமில்லாமல் மென்மையாக குச்சியை வைத்து பாம்பை பிடிக்க முயல அதுவும் பயந்து வேகமாக ஓடாமல் மெதுவாகவே நகர்ந்தது.ஒரு கட்டத்தில் பாம்பு சுருண்டு படுத்துக் கொண்டதும் அதை குச்சியால் தூக்கி அங்கிருந்த பக்கெட்டில் விட்டார்.

 


பாம்பிருந்த பக்கெட்டை அதே குச்சியால் தூக்கிச் சென்ற கீர்த்தி வீட்டுக்கு வெளியே இருந்த புதரில் விட பாம்பு வேகமாக புதருக்குள் சென்று மறைந்தது. கீர்த்தி பாம்பு பிடித்த வீடியோ நெட்டில் வலம் வருகிறது. அவரது துணிச்சலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.