குவண்டம் ஆப் சோலஸ், கேசினோ ராயல். ஸ்கை பால், ஸ்பெக்டர் ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் 007 படங்களில் நடித்தவர் டேனியல் கிரேக். அடுத்து கடைசியாக அவர் நடிக்கும் ஜேம்ஸ் பாண்ட் படம் ’நோ டைம் டு டை’. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் வரிசையில் இது 25வது படம் ஆகும்.
வழக்கம்போல் இப்படத்திலும் ஹாலி வுட் நடிகர் டேனியல் கிரெய்க் தனது துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள் வில்லியின் அட்டாக், வில்லனின் வேகமான தாகுக் குதல் என எல்லாவற்றிலும் இருந்து சாகசங்கள் செய்து ஹீரோ டேனியல் தப்பிக்கும் த்ரில்லிங் ஆக்‌ஷன் காட்சிகள் டிரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தி இருக் கிறது. இப்படத்தில் ராமி மாலெக் வில்லனாக இதுவரை ஜேம்ஸ் பாண்ட்கள் சந்திக்காத ஆபத்தான வில்லனாக நடித்திருக்கிறாரம்.
நோ டைம் டு டை ஜேம்ஸ் பாண்ட் படத்தை கேரி ஜோஜி ஃபுகுனாகா இயக்கி உள்ளார். முன்னதாக, இப்படத்தை டேனி பாயில் இயக்கு வதாக இருந்தது. பட நிறுவனத் துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் விலகினார்.

நீல் பூர்விஸ், ராபர்ட் வேட், ஃபுகுனாகா மற்றும் ஃபோப் வாலர்-பிரிட்ஜ் ஆகியோரால் ஸ்கிரிப்ட் அமைத் திருக்கின்றனர். டேனியலுடன் ரால்ப் ஃபியன்னெஸ், நவோமி ஹாரிஸ், பென் விஷா, ரோரி கின்னியர், ஜெஃப்ரி ரைட் மற்றும் லியா செடாக்ஸ் நடித்திருக்கின் றனர். வரும் நவம்பர் 12 ஆம் தேதி இங்கிலாந்திலும், பின்னர் நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவிலும் படம் வெளியாக உல்ளது.