சென்னை: மறைந்த ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்தோட்டம் வேதா இல்லம் அருகே, சசிகலா கட்டி வரும் புதிய பங்களாவில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீது, வருமான வரித்துறை மேலும் பல வழக்குகளை தொடுத்துள்ளது. அதன்படி, அவரது  ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலா சொத்துக்கள் முடக்கம் செய்து, அறிவித்தது. அது தொடர்பான நோட்டீஸ் சிறையில் உள்ள சசிகலாவிடம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  சென்னை போயஸ் கார்டனில், ஜெ. வீடு அருகே சசிகலா புதிதாக கட்டி வரும் ஆடம்பர மாளிகையில், வருமான வரித்துறை, சொத்து முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் ஒட்டி உள்ளது.

இது சசிகலா குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சசியின் மேலும் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்..