கொரோனா ஊரடங்கு காலத்தில் கதையொன்றை எழுதி படமாக்கிய கார்த்திக் ராஜு. படத்தில் ரைசா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.

தற்போது இந்தப் படத்துக்கு தி சேஸ் என்று பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபர்ஸ்ட் லுக்கில் தலைகீழாக தொங்கும் படி ரைசா உள்ளார்.

இந்த போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் பணிபுரிந்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சாபு ஜோசப் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். சூர்ப்பனகை படத்தின் தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.