ந்தி சினிமா உலகில் கதை பஞ்சமா என தெரியவில்லை.

தமிழில் வெற்றி பெற்ற அரை டஜன் சினிமாக்கள், இப்போது இந்தியில் ரீ-மேக் செய்யப்படுகின்றன.
ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா’ இங்கே வசூல் குவித்ததால்,அதனை ‘லட்சுமிபாம்’ என்ற பெயரில் அவரே இந்தியில் இயக்கி வருவது தெரிந்த விஷயம்.

அக்‌ஷய்குமார் கதாநாயகனாக நடிக்க, கியாரா அத்வானிக்கு ஹீரோயின் வேடம்.
லிங்குசாமி இயக்கிய ’வேட்டை’ ‘பாகி- 3’ என்ற பெயரில் இந்தியில் தயாராகிறது. ஆர்யா நடித்த வேடத்தில் டைகர் ஷெராப் நடித்துள்ளார்.

மகிழ்திருமேனி இயக்கிய ‘தடம்’ படமும் இந்தி பேசுகிறது. அருண் விஜய் வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார்.

கார்த்தி நடித்து பெரும் வெற்றி பெற்ற ’’கைதி’ அஜய்தேவ் கான் நடிக்க இந்தியில் தயாராகிறது.
விஜய்சேதுபதி நடித்த விக்ரம்வேதா உள்ளிட்ட சில படங்களும் இந்தியில் ரீ-மேக் ஆகின்றன.

இது தவிர தெலுங்கில் அண்மையில் ’ஹிட்’ஆன சில திரைப்படங்களும், பிரபல நடிகர்கள் பங்களிப்பில் இந்தியில் உருவாகின்றன.

-பா.பாரதி.