சென்னை: தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், யுஜிசியின் அறிவுரைப்படி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், விரைவில் தேர்வுகளை நடத்த அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் துணை வேந்தர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் அரசின் முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும், அதைத்தொடர்ந்து தேர்வு தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ‘இது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்வதாகவும் அதன் பின்னரே ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்