உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை இரண்டரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எட்டரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி நேகா ஷுக்லா, அறிவியல் தொழில்நுட்ப யுக்தியில் புதிய தொப்பி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இந்த தொப்பியை அணிந்திருப்பவரிர் பக்கத்தில், அதாவது கொரோனா சமூக விலகலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 6 அடி தூரத்தை கிடைபிடிக்காமல், அருகே வந்தால், தொப்பியில் இருந்து பீப் பீப் ஒலியையும், அதிர்வையும் ஏற்படுத்தி, தொப்பி அணிந்திருக்கும் நபரை எச்சரிக்கும். இதனால், மற்றவர்களிடம் இருந்து விலகி சென்று விடலாம்.
உலக நாடுகள் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியுடன், பொதுஇடங்களில், ஒருவருக் கொருவர், குறைந்தது 6 அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், இந்த எச்சரிக்கை தொப்பி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தனி ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கும் நேகா, இந்த சாதனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த ஏப்ரல் மாதம் இறங்கியதாகவும், அவரது கடின உழைப் பின் முடிவில் இந்த தொப்பியை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளார்.
இவரது கண்டுபிடிப்பு, அமெரிக்காவில் நடை பெற்ற இளம் விஞ்ஞானிகள், திறமைசாலிகள் அறிமுகம் என்னும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, தொப்பி யின் செயல்விளக்கத்தை செய்து காட்டி அசத்தினாள்.
இது பார்வையாளர்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து கூறிய நேகா, இந்தத் தொப்பியின் உள்ளே அல்ட்ராசோனிக் சென்சார், மைக்ரோப்ராசசர், பஸ்சர், 9 வோல்ட் பேட்டரி ஆகியவை உள்ளன. பொது இடங்களில் நடந்து போகிறபோதோ அல்லது கூடியிருக்கிறபோதோ நமக்கு முன்னே இருப்பவர்களுக்கும் நமக்கும் இடையில் 6 அடி தூரம் இருப்பதைக்காட்ட இந்தத் தொப்பி லேசான அதிர்வை உண்டுபண்ணும். பீப்… பீப்… பீப்… என்னும் ஒலியை எழுப்பி எச்சரிக்கும் என்றார்.
இந்த சமூகத்துக்கு பயனுள்ள விதத்தில் எதையாவது கண்டுபிடிக்க வேண்டுமென்று உந்துதலின் வெவெப்பாடே இந்த ‘சிக்ஸ் ஃபீட் அபார்ட்’ அலாரம் கேப் – அதாவது 6 அடி விலகல் உஷார் படுத்தும் தொப்பி என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள். அறிவியல் மட்டுமல்ல இசையிலும் எனக்கு பேரார்வம் என்று சொல்லும் நேகா, பல ஆண்டுகளாக பியானோவும், கிதாரும் வாசித்து வருகிறாள். என் அறிவியல் திறமையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த தொழில்முனைவராகவே ஆசை என்கிறாள்.
நேகா, பெனிசுலா நாட்டில் மெக்கானிக்ன் பர்க் நகரில் உள்ள கம்பர்லாண்ட் வேலி ஹை ஸ்கூலில் பள்ளி படிப்பு படித்து வருகிறார். பல்வேறு அறிவியல் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை, விருதுகளை வென்றுள்ளவர், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்கு பாடங்களில் தனி ஆர்வம் காட்டி வருகிறார். எழுத்தாளர், பேச்சாளர் என்று பன்முகம் கொண்டவர் நேகா.