Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

லவ் ஜிகாத்: சென்னை பெண்ணை கடத்திய வழக்கில் ஜாகீர்நாயக் உள்பட 5 பேர் மீது வழக்கு

Aug 27, 2020

சென்னை: சென்னை சேர்ந்த பெண்ணை கடத்திய வழக்கில் பிரபல மதபோதகர் ஜாகீர்நாயக் உள்பட 5 பேர் மீது தேசியபுலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளது.

சென்னையை சேர்ந்த  தொழிலதிபரின் மகள், இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உயர்படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மேமாதம் 28ந்தேதி முதல் மாயமானதாக புகார் கூறப்பட்டது.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இங்கிலாந்தில் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. அதே வேளையில், அந்த மாணவியின் தந்தை,  தனது மகள் திடீரென மாயமானதுதொடர்பாக சென்னை காவல்துறையிலும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் புகார் கூறினார்.
இதையடுத்து புகார் தொடர்பாக மத்திய உள்துறை  என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதன்படி,  தொழிலதிபரின் மகளை லண்டனில் இருந்து கடத்தியது வங்கதேசத்தை சேர்ந்த மதபோதகார் நபீஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த நபர், படிக்கச் சென்ற மாணவியை காதலிப்பதாக  (லவ்ஜிகாத்)  நாடகமாடி, அவரை  கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதன்  விவகாரத்தில், அவருக்கு மதபோதகர் ஜாகிர் நாயக் உள்பட பலர் ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆலோசனை வழங்கிய, நபீசின் தந்தை சா்தார் செகாவத் உசேன் பாகுல், மத போதகா் ஜாகிர் நாயக், யாசி குஷிதி, நகுமான் அலிகான் ஆகிய 5 போ் மீது சதித்திட்டம் வகுத்தல், குற்றச் செயல் புரிதல், ஆள் கடத்தல், பாலியல் தொல்லை கொடுத்தல், ஏமாற்றுதல், பணம் கேட்டு மிரட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக என்ஐஏ, லண்டன் காவல்துறை உதவியை நாடியுள்ளது.

Post navigation

அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு:  இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer