சென்னை: சென்னையில், 5வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் 2வது கட்ட நடவடிககை ஆகஸ்டு 31ல் தொடக்குவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக இந்த நிகழ்ச்சி ஆகஸ்டு 28ந்தேதி வரை நடை பெறும் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, 2வது கட்டமாக வைட்டமின்-ஏ சொட்டு மருந்துகளை வழங்குவதற்கான முகாம்கள் ஆகஸ்டு 31ந்தேதி முதல் செப்டம்பர் 4 வரை நடத்தப் படும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் வைட்டமின்-ஏ முகாம்கள் திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளதாகவும், புதன்கிழமை தவிர, ஆகஸ்ட் 28 வரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centres) மற்றும் கார்ப்பரேஷன் மகப்பேறு மருத்துவ மனைகளில் (Corporation Maternity Hospitals) முகாம்கள் நடத்தப்படும் என்றும்,. இந்த முகாமில், ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ வழங்கப்படும்.
முகாம்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படும்.
முகாம்களின் இரண்டாம் கட்டம், புதன்கிழமை தவிர, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை அனைத்து நாட்களும் நடத்தப்படும்.
மேலும், மருந்தைப் பெற தவறவிட்ட குழந்தைகளுக்காக ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும்”.
மேலும், முகாமிற்கு குழந்தைகளை அழைத்து வருபவர்களின் வெப்பநிலை வெப்ப ஸ்கேனர் களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.