Skip to content
  • Sat. Jul 18th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இன்று மாலை ‘ரேண்டம் எண்’ வெளியீடு…

Aug 26, 2020

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று ரேண்டம் எண் வெளியிடப்படும் என  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  தெரிவித்து உள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் கடந்த மாதம் (ஜூலை)  15-ந்தேதி  தொடங்கியது. ஆகஸ்டு  16-ந்தேதியுடன் முடிவடைந்த  காலக்கட்டத்தில்,  பொறியியல் படிப்புக்கு  1லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ள்னர்.  அவர்களில், 1லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருப்பதாக வும்,  இன்னும்  29 ஆயிரத்து 398 பேர்   கட்டணம் செலுத்தாமல் இருப்பதாகவும்,  1லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து இருப்பதாக வும் உயர் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான  ரேண்டம் எண் இன்று மாலை வெளியிடப்படும் என்றும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை 4 மணி அளவில், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே ரேண்டம் எண் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

தமிழகஅரசின் கடும் கட்டுப்பாடு: சென்னையைப் புறக்கணிக்கும் வெளிநாட்டு தமிழர்கள்…
குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ சொட்டு மருந்து! 2வது கட்டம் ஆகஸ்டு 31ல் தொடக்குவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Related Post

தமிழ் நாடு

அண்ணா பல்கலைக்கழக PhD மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer