கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு 150 நாட்களுக்கு மேலாகிறது .
இதுவரை கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து செப்டம்பர் 1-ம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த இருப்பதாகவும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.