Skip to content
  • Fri. Jul 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம்! கருவூலங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

Aug 20, 2020

சென்னை: ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம் என வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியத்தை எடுக்கவில்லை என்றால்,  ஓய்வூதிய தாரர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டும் என  வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தர விட்டிருந்தது.

இதற்கு ஓய்வூதியதாரர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  மேலும் கொரோனா காலக் கட்டத்தில், மக்கள் வீட்டை விட்ட வெளியே வரவே அனுமதி மறுக்கப்படும் நிலையில், வயதானவர்கள் எப்படி வங்கிக்கு செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம் என  வங்கிகளுக்கு தமிழக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் சி.சமயமூர்த்தி, அனைத்து கருவூல ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதவாது,

பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களும், ஓய்வூதியர்களும் எழுதிய கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்காதது பற்றி தெரிவித்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, அவர்களுக்கு குறிப்பாக முதியோர் வெளியே செல்வதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளினால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஓய்வூதியர்கள் தங்களின் வங்கி கணக்கை இயக்க முடியாமல் போய்விட்டது.

எனவே கொரோனா பரவல் காரணங்களுக்காக, கடந்த 6 மாதங்களாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம். இதுகுறித்த தகுந்த அறிவுரைகளை சார் கருவூலம் உள்பட அனைத்து கீழ்நிலை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

விநாயகர் சதுர்த்தி அன்று கலவரம் நடத்த திட்டமா? வைரலாகும் எச்.ராஜாவின் வன்முறை பதிவு…
செப்டம்பர் 21ந்தேதி முதல் 10, 11, 12வது வகுப்பு துணை தேர்வு! தேர்வுதுறை அறிவிப்பு

Related Post

தமிழ் நாடு

புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் 

தமிழ் நாடு

பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு, மனை வாங்க – விற்க தடை இல்லை… வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்

சினி பிட்ஸ் தமிழ் நாடு

‘செக்’ மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

உலகம்

இந்தியா உலகம்

60 நாடுகள் மீது இன்று முதல் புதிய இறக்குமதி வரி… அமெரிக்கா அறிவிப்பு

July 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer