இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தனக்குக் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார் ‘ஆர்எக்ஸ் 100’ பட இயக்குநர் அஜய் பூபதி.
Vachesindi
— Ajay Bhupathi (@DirAjayBhupathi) August 12, 2020
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ள அவர், ‘விரைவில் குணமாகி பிளாஸ்மா சிகிச்சை செய்வேன்’ என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.