https://www.instagram.com/p/CDTveEzDM3D/

கொரோனா ஊரடங்கில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கௌரவ் நாராயணன்.

ஏற்கெனவே தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பவர், தற்போது மேலும் 6 கிலோ வரை குறைத்து, 6 பேக் வைத்து ஃபிட்டாகி வருகிறார்.

இந்த மாற்றத்தின் மூலம், திரையுலகினர் மத்தியில் கிடைத்த வரவேற்பால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் கெளரவ். கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன், தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபடவுள்ளார்.

https://www.instagram.com/p/CDTvh7VDTBH/

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’, ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களை இயக்கியவர் கெளரவ் நாராயணன். ‘நான் ராஜாவாகப் போகிறேன்’, ‘சிகரம் தொடு’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.