சென்னை:
தமிழகத்தில் கல்வியை சீரழித்து வரும் அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும் என்று பதில் அளித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, நடப்பு கல்வியாண்டில் அமலுக்கு வரும் நிலையில், இனிமேல் முதல்வருடன் கலந்தாலோசித்து, தமிழகத்தில் கருத்து தெரிவிக்கப்படும் என்று கூறியிருப்பது செய்தியாளர்களிடையே, அவரது அறியாமையை வெளிப்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?
2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.
குழந்தைகளுக்கு பாடம் நடத்த அரசு புதிய அடிப்படை திட்டம்
10வது, 12வது பொதுத்தேர்வு கைவிடப்படுகிறது.
புதிய பள்ளி அமைப்பு 5+3+3+4 இருக்கும் (அதாவது 1முதல் 4வரை, 6 முதல் 8 வரை, 9 முதல் 11 வரை, பட்டப்படிப்பு 4 ஆண்டுகள்)
5 வது வகுப்பு வரை மாதிரி பள்ளி, 6 முதல் 8 வரை இடைநிலைப் பள்ளி, 8 முதல் 11 வரை உயர்நிலைப் பள்ளி , 12 முதல் பட்டப்படிப்பு வரை. அதாவதுஇ, பள்ளிக்கல்வியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் 12 ஆண்டுகள் கொண்ட பள்ளிக்கல்வி 5 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 4 ஆண்டுகள் என வகைப்படுத்தப்பட்டு பாட திட்டம் வகுக்கப்படும். இதுதவிர 3 ஆண்டுகள் மழலையர் பள்ளி வகுப்பும் உண்டு.

5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது.
6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.
8 ஆம் வகுப்பு முதல் 11 வரை மாணவர்கள் பாடங்களை த் தேர்வு செய்யலாம்
12-ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படும்.பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலமும் பாடம் கற்பிக்கப்படும்.
அனைத்து பட்டப்படிப்பு ம் மேஜர் மற்றும் மைனர் பாடங்கள் இடம்பெறும்
(உதாரணம் – அறிவியல் மாணவர் இயற்பியல் மேஜர் பாடமாக எடுத்துக்கொண்டார், மைனப் பாடமாக இசைகூட தேர்வு செய்யலாம்)
அனைத்து உயர்கல்வியும் ஒரே ஒரு அதிகாரத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படும்.
யு.ஜி.சி. ஏஐசிடிஇ ஒன்றிணைக்கப்படும்.
அனைத்து பல்கலைக்கழகம் அரசு, தனியார், திறந்த, நிகர்நிலை, தொழிற்கல்வி போன்றவை அதே தரநிலையில் இருக்கும்.
நாட்டில் அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் புதிய ஆசிரியர் பயிற்சி வாரியம் அமைக்கப்படும், எந்த மாநிலத்திலும் மாற்ற முடியாது
எந்த ஒரு கல்லூரிக்கும் அதே அளவு அங்கீகாரம் தரமதிப்பீட்டு க்கல்லூரி யின் தரமதிப்பீட்டு அடிப்படையில் தன்னாட்சி உரிமைகளும் நிதிகளும் கிடைக்கும்.
பல்கலைக்கழக அரசு, தனியார், திறந்த, கருதப்பட்ட, தொழில் போன்றவற்றுக்கு ஒரே தரம் மற்றும் பிற விதிகள் இருக்கும்.
நாட்டில் உள்ள அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் புதிய ஆசிரியர் பயிற்சி வாரியம் அமைக்கப்படும், இதில் மாநிலங்கள் எந்தவொரு மாற்றமும் செய்ய முடியாது.
எந்தவொரு படத்தொகுப்பிற்கும் அதே அளவிலான அங்கீகாரம், அதன் மதிப்பீட்டு படத்தொகுப்பின் அடிப்படையில் தன்னாட்சி உரிமைகள் மற்றும் நிதிகள் கிடைக்கும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக புதிய அடிப்படை கற்றல் திட்டம் அரசாங்கத்தால் உருவாக்கப்படும்
மாணவர்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது. பள்ளி மற்றும் உயர் கல்வியில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் நிலையில், சமஸ்கிருத பாடமும் இருக்கும். விருப்பப்பட்ட மாணவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
உயர் கல்வி நிறுவனங்களில் 2035-ம் ஆண்டுக்குள் மாணவர்கள் சேர்க்கையை 50 சதவீதம் அதிகரிக்கவும், புதிதாக 3½ கோடி இடங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
சட்ட மற்றும் மருத்துவ கல்லூரிகள் தவிர பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் அந்த வகுப்பில் சேர்ந்து படிக்க புதிய கல்வி கொள்கை அனுமதி வழங்குகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்.
பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு 15 ஆண்டுகளுக்குள் படிப்படியாக தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.
இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
புதிய கல்விக்கொள்கை பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.