கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடைபெறும் என வெளியான அறிவிப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து யுஜிசி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 31ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, அதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை 6 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் நடத்தும் சாத்தியம் இல்லாததால், பள்ளி தேர்வுகள், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
ஆனால், கல்லூரிஇறுதியாண்டு இறுதித்தேர்வு எழுத வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, மனு தொடர்பாக பதில் மனுதாக்கல் யுஜிசிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை 31ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.