சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. வரலாறு காணாத அளவில், தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சம் பெற்று வருவது சாமானிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நிலையில் ஒரு சவரன் விலை ரூ. 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால், பொருளாதாரமே சரிவை கண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை மட்டும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. மக்களின் பாதுகாப்பான முதலீடாக பெரும்பாலோர் தங்கத்தில் முதலீடு செய்வதால், அதன் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறகின்றனர்.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வியாபாரிகளுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ள நிலையில், சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த வாரம் அதிரடியாக உயரத்தொடங்கியது. தினசரி 500க்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், இன்றும்கிராம் ஒன்றுக்கு ரூ.74 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (27ந்தேதி)காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.74 உயா்ந்து, ரூ.4,978 ஆகவும், சவரனுக்கு ரூ.592 உயா்ந்து ரூ.39,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.3.90 காசுகள் உயா்ந்து, ரூ.70.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,900 அதிகரித்து, ரூ.70,800 ஆகவும் விற்பனையாகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சாமானிய, நடுத்தர மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வருகிறது.