புதுச்சேரி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணி. இவருக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையார் மகனுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் எளிய முறையில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். அடுத்து வரும் 3 மாதங்களில் திருமண ஏற்பாடுகள் செய்யப்படும்.