9வது தேசிய வாக்காளர் தினம் இன்று!
இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கடந்த 2011ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் முக்கிய நோக்கம் வாக்காளர் பதிவை அதிகப்படுத்தி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்துவதேயாகும். தேர்தல் நடைமுறைகளில் பொது மக்களை – குறிப்பாக இளைஞர்களை – ஈடுபடுத்தி, வாக்காளர்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்து டன், தேசிய வாக்காளர் தினத்தை பெரிய அளவில் கொண்டாட நாடுமுழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தையும், ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்று நாடு முழுவதும் இன்று 9வது தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 6 லட்சம் இடங்களில் உள்ள 10 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்காளர் தினத்தை கொண்டாடப்படுகிறது.