2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக ஆர்.பி.ஐ. இந்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கிய நிலையில் அதனை அக்டோபர் 7 வரை பின்னர் நீடித்து உத்தரவிட்டிருந்தது.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7 ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 30 நவம்பர் 2023 முடிய 9,760 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில் 97.26 சதவீத நோட்டுகள் திரும்பபெறப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது.

சுமார் 90 சதவீத நோட்டுகள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாகவும் மீதி நோட்டுகள் பணமாக மாற்றப்பட்டதாகவும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.