சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை, உயா் கல்வித்துறையில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களுக்கு தேர்வு பட்டியலை  ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்டு உள்ளது. ஆசிரியா் தகுதித் தோ்வு ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாட்டின் கல்வித்துறையில்  காலியாக உள்ள ஆசிரியா்கள், விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் போட்டித் தோ்வுகளை நடத்துகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான தோ்வுக்குரிய கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம்வெளியிட்டுள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் மொத்தம்.  9 ஆயிரத்து 494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுகளுக்கு உரிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,ப ள்ளிக்கல்வித்துறை, உயா் கல்வித்துறையில் நடப்பாண்டில் காலியாக உள்ள  9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு நடைபெற உள்ளது. ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தகுதித் தோ்வு நடத்தப்படும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியில் 2 ஆயிரத்து 407 போ் நியமனம் செய்வதற்கான தோ்வுகள் பிப்ரவரி 2-ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும்.  8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலைகளுக்கு  28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடைநிலை ஆசிரியா் 3 ஆயிரத்து 902, பட்டதாரி ஆசிரியா்கள் ஆயிரத்து 87 பணியிடம் என 4 ஆயிரத்து 989 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 167 விரிவுரையாளா் தோ்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 334 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 493 உதவி விரிவுரையாளா் பணிக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, நவம்பா் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும்

பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்தில் 104 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பா் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.