சென்னை: தமிழ்நாடு முழுவதும் 14, 214 பேருந்துகள் இயக்கம், அதாவது 94 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு  போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்து உள்ளது.

6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழற்சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. ஆனால்,, சிஐடியு, திமுக, பாமக உள்பட பல தொழிற்சங்கங்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவில்லை என அறிவித்து உள்ளது.  இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 14, 214 பேருந்துகள் அதாவது 94 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக  போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.  மொத்தம் இயக்கப்படும்  15 ஆயிரத்து 138 பேருந்துகளில் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 97 சதவீதம் பேருந்துகள் இயங்குவதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது மொத்தம் இயக்கப்படவேண்டிய மூன்று ஆயிரத்து 233 பேருந்துகளில், மூன்று ஆயிரத்து 129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மண்டலத்தில் மொத்தம் 84 சதவீத பேருந்துகள் இயங்குவதாகவும்,. அதாவது காலை 8 மணி நிலவரப்படி கால அட்டவணைப்படி இயக்கப்படவேண்டிய மொத்தம் இரண்டு ஆயிரத்து 52 பேருந்துகளில் ஆயிரத்து 724 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மண்டலத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது மொத்தம் இயக்கப்படவேண்டிய ஆயிரத்து 101 பேருந்துகளில் ஆயிரத்து 79 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஆனால் மொத்தம் இயக்கப்படவேண்டிய பேருந்துகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 138 பேருந்துகள் எனவும், மொத்தம் 94 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.