கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் 90% மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 2 க்கு வழங்கபடுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ”கடியா சாத்தி” என்னும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இதில் பல ஏழைமக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
இதை தொடங்கி வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
“இது கடியா சாத்தி தினம் ஆகும். இதன் மூலம் 8.5 கோடி வங்க மக்களின் உணவு பாதுகாப்பை நாம் உறுதி செய்துள்ளோம்.
நாம் வனங்களிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் உள்ளவர்களுக்கு சிறப்பு உதவி அளிக்கிறோம்.
இதன் மூலம் விவசாயிகள், பழங்குடியினர், தேயிலை தோட்ட தொழிலாளிகள் உள்ளிட்ட பலர் பயனடைவார்கள்”
என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் 90% வங்க மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ.2 என்னும் விலையில் வழங்கப்படும் எனவும் இதனால் 50 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.