சென்னை:
ன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது.
Job_vacancy-550x415
இதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 903 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 3 வகை ஊராட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலையொட்டி ஊராட்சி தேர்தல் பணிகளை கவனிக்க ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், கணினி இயக்குபவர் தலா ஒன்றும், உதவியாளர் 3 பணியிடங்களும் உருவாக்கப்படும். இதனை போன்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பணியிடங்கள் 31, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 32, உதவியாளர் 32, கணினி இயக்குபவர் 32, ஊராட்சி ஒன்றியங்களில் உதவியாளர் 385, கணினி இயக்குபவர் 385 என்று மொத்தம் 903 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் தலா ஒரு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள மாவட்டங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.