ஐகோர்ட்டில் 317 காலி பணியிடம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Must read

 
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பபிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 317 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி: Personal Assistant to the Hon’ble Judges – 76
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400 + சிறப்பு சம்பளம்
பணி: Personal Assistant (to the Registrars) – 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + சிறப்பு சம்பளம்
பணி: Personal Clerk (to the deputy Registrars) – 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800 + சிறப்பு சம்பளம்
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பொது கல்விக்கான தேர்வு 27.08.2016 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
பணி: Computer Operator – 61
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Typist – 84
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 + சிறப்பு சம்பளம்
பணி: Reader / Examiner – 80
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Cashier – 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Xerox Operator – 06
சம்பளம்: மாதம் ரூ.4,800 – 10,200 + தர ஊதியம் ரூ.1,650
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் -I : பொது கல்வி, பொதுத் தமிழ், ஆங்கிலத்துக்கான தேர்வு 28.08.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
தாள் -II : கணினி தேர்வு 28.08.2016 அன்று மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். (Computer Operator பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும்)
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.50 (ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை) தேர்வுக் கட்டணம்: ரூ.100
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2016
வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.08.2016
மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_10_not_eng_high_court_services.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

More articles

Latest article