சென்னை: 
சென்னையில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னாள் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
criminal
சென்னை  கமிஷனர்  ராஜேந்திரன் உத்தரவின் பேரில் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னை போரூர் தினேஷ், வியாசர்பாடி விக்ரம், ராயபுரம் உமர் பாஷா, கொளத்தூர் வினோத்குமார், நந்தம்பாக்கம் சதீஷ், கிழக்குத் தாம்பரம் சீசிங் ராஜா, கூடுவாஞ்சேரி ராஜசேகர் , கே.கே.நகர் கனகு ஆகிய 8 பேரும்  கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 8 பேரும் பழைய குற்றவாளிகள். இவர்கள்மீது ஆள்கடத்தல், வழிப்பறி, கொள்ளை, கொலை பல்வேறு வழக்குகள் உள்ளது.