சென்னை

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 9 நிலையங்களின் கட்டுமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமானங்கள் விரைவாக நடைபெற்று வருகின்றன.  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மெட்ரோ ரயில் வரைபடங்கள் அதன் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன/  இந்த வரை ப் அடாத்தின் மூலம் தற்போது 9 ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அவை தபால்பெட்டி, டவுட்டன் ஜங்ஷன், செயிண்ட் ஜோசப் கல்லூரி, பட்டினப்பாக்கம்,, நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, காளியம்மன் கோவில், போரூர் ஜங்ஷன் மற்றும் மாதவரம் ஜங்ஷன் ஆகியவை ஆகும்.   இதன் மூலம் மொத்தம் ரூ.1200 கோடி வரை கட்டுமான செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டம் வரும் 2026 ஆம் ஆண்டு முழுமையாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது.  நீக்கப்பட்ட இந்த ரயில் நிலயங்கள் அருகே மிகக் குறைந்த தூரத்தில் வேறு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளதால் நீக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் தபால்பெட்டி ரயில் நிலையம் அமைக்கப்பட்டால் ஒரு கூர்மையான வளைவு உருவாகும் எனவும் அதை பராமரிப்பது எளிதானது இல்லை என்பதால் அந்த நிலையக் கட்டுமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.