சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு  வேட்புமனுத் தாக்கல்  இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, பல இடங்களில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2020) இறுதிவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இநத தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 15ம் தேதி முதலாக பெறப்பட்டு வருகின்றன. இன்று மாலையுடன் 5மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. இதையொட்டி  அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதையடுத்து,  வேட்புமனுக்களை திரும்ப பெற 25ஆம் தேதி கடைசி நாள்.

20ந்தேதி நிலரப்படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41,027 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10,107 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,683 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 வேட்புமனுக்களும் என 54,045 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் அதிமுக திமுக உள்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதற்கிடையில், ஊராட்சி பதவிகள் ஏலம் விடப்படும் அலங்களும் அரங்கேறி வருகின்றன.