சென்னை: நீட் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என நீதிபதி ஏ.கே. ராஜன் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைத்துள்ளது. இந்த குழுவினர் ஏற்கனவே 2 முறை ஆலோசனை நடத்தய நிலையில், பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை அனுப்ப அறிவுறுத்தி இருந்தது. அதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், ஏகேராஜன் ஆய்வுக்குழுவின் மூன்றாவது கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், இதுவரை மொத்தமாக 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று கூறியதுடன், அனைத்துக் கருத்துகளையும் நன்றாக ஆராய்ந்து ஒருமாதத்திற்குள் அறிக்கையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். எங்களது ஆய்வு முடியாவிட்டால் அறிக்கை தாக்கல் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் திங்களன்று நடைபெறும்.” என்று கூறினார்.