டெல்லி

டந்த 6 நாட்களில் அடுத்தடுத்து 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அண்மையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. இந்த விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் (வயது 68) பலியானார்.  நேற்று ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன மூத்த அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உயர்மட்ட கூட்டம் நடத்தியது.

இந்த கூட்டம்பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் பயணிகள் சேவைக்கான ஒழுங்குமுறைகளை உறுதி செய்யும் நோக்கில் நடந்தது. அதில் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை பற்றிய சமீபத்திய செயல் தரவுகளை இயக்குநரகம் மறுஆய்வு செய்தது.

போயிங் 787 விமானத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, 12 மற்றும் 17 வரையில் (6 மணி வரை) மொத்தம் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  அவற்றில் 66 விமானங்கள் போயிங் 787 ரக விமானங்கள் ஆகும்.