சென்னை:
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக 800 செவிலியர் மார்ச் 31 ஆம் தேதியுடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து, சென்னை – டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்த முற்பட்ட செவிலியர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 800 செவிலியரும் படிப்படியாக பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறினார்.