சென்னை: 80% பெண்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்றும், தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது திமுக அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்துள்ளார். அவரது கருத்து விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கும் போதை கலாச்சாரத்தால், மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திமுக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினாலும், அது கண்துடைப்பாகவே உள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்துநெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல சம்பவங்களும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, தமிழ்நாட்டில் எங்கும் போதைப்பொருள் உற்பத்தி நடைபெறவில்லை. குஜராத்தில் இருந்துதான் வருகிறது என்று கூறியவர், பள்ளி, கல்லூரிக்கு அருகில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் எப்போதும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது என்று சப்பைகட்டு கட்டியவர், அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியைவிட சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போலி நாடகத்தை உருவாக்க மத்திய அரசும், இ.பி.எஸ்.ம் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது, அ.தி.மு.க. அமைச்சர் மீது குட்கா வழக்கு இருக்கிறது.* போதைப்பொருள் சப்ளை செய்பவர்களை கட்சியில் வைத்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது.
தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையின் காரணமாக குற்றங்கள் குறித்து பெண்கள் அதிகளவில் புகாரளிக்க முன்வருகின்றனர். அதனால், 80 சதவீத பெண்கள் தி.மு.க. கூட்டணிக்கு தான் வாக்களிக்க போகிறார்கள் என்ற தகவல் வருகிறது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை.
எடப்பாடி பழனிசாமியையோ அவரது கொள்கைகளையோ தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்ப தயாராக இல்லை. பிரசார பயணத்தில் தோல்வி கண்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது இ.பி.எஸ். தான்.* அ.தி.மு.க. என்ற கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதால் பதவியை தக்க வைக்க இ.பி.எஸ். முயற்சி செய்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் போதும் என நினைக்கிறார் இ.பி.எஸ்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]