தேமாஜி

சாம் மாநிலம் தேமாஜி பகுதியில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

அசாம்  நிலம் தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாய் பகுதியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 80 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த கிராமத்தின் பிரார்த்தனை இல்லத்தில் மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் கலந்து கொண்ட போது அங்குக் கருப்பு கொண்டைக்கடலை மற்றும் பச்சைப்பயறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்ட உடனே அவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு அப்பகுதிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் குழு விரைந்தது.

பிரசாதத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைக்கிடமான 6 பேர் சிகிச்சைக்காக தேமாஜி, சிலபதார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.