சென்னை,

மிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சமீப காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் காயச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் டெங்கு போன்ற மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு மட்டுமின்றி, மலேரியா, பன்றி காய்ச்சல், வைரஸ் போன்ற இதர வகையான காய்ச்சல்களாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் டெங்குவால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  69 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். அப்போது டெங்கு கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில்  டெங்குவால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.