சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அமைச்சர்களில் பலர் தோல்வியை தழுவி வருகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட 8 அமைச்சர்கள் தோல்வி முகத்தில் உள்ளனர்.
தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போடி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், கே.ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பண்ணன், ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ, சரோஜா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை பெற்று வருகின்றனர்.
சென்னையில் களமிறங்கிய டி.ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இது அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.