சென்னை: தமிழகத்தில் கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக தலைமைச்செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்ஆணையர் உள்பட பலர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது சுகாதாரத்துறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னை, சேலம் உள்பட  8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

1.மருத்துவக் கல்வி இயக்குநரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குநரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி

6.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7.கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8.விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.