டில்லி

த்தார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர்.

கத்தார் நாட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் அங்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கடந்த 201 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்

கடந்த அக்டோபர் மாதம் அவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.  இதில் இந்திய அரசு தலையிட்டு அவர்கள் மேல்முறையீடு செய்ய ஏற்பாடு செய்தது.  வழக்கை விசாரித்த கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றம்  தண்டனையைக் குறைப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்திய வெளியுறவுத் துறை மேலும் வற்புறுத்தியதால் இவர்கள் 8 பேரையும் கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இன்று அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.