சென்னை:
தமிழக அரசின் 8% கேளிக்கை வரியை எதித்து சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்றுமுதல் திரையரங்குகள் மூடப்படுகின்றன.
ஏற்கனவே கியூப் பிரச்சனை காரணமாக புதுப்படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படாமல் உள்ள நிலையில், இன்றுமுதல் திரையரங்குகளை மூடப்படுகிறது.
.தமிழ் திரையரங்க சங்கம் உரிமையாளர்களின் அவசரக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், ஏற்கனவே தமிழக அரசு ஒப்புக்கொண்ட சில விஷயங்களுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்காமல் இருந்தால் வருகிற மார்ச் 16ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்படும் என்று தீர்மானம் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, இன்றுமுதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த போராட்டத்தில் சென்னை சங்கம் இடம்பெறாது என்றும், சென்னையில் அனைத்து தியேட்டர்களும் வழக்கம்போல் செயல்படும் எனவும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்ட தீர்மானங்கள்
1.8 % கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து !
சீட்குறைப்பு அனுமதி
லைசன்ஸ் 3 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க அனுமதி
திரையரங்க பராமரிப்பு கட்டணமாக ரூ.5(ஏ.சி), ரூ.3(சாதாரண அரங்கு) தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.