புதுடெல்லி: இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு மதிப்புவாய்ந்த ‘ப்ளூ ஃபிளாக்'(நீலக் கொடி) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகனிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான பவுண்டேஷன்தான் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.
ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி கடற்கரை, குஜராத்திலுள்ள ஷிவ்ராஜ்பூர் கடற்கரை, யூனியன் பிரதேசம் டையூவிலுள்ள கோக்லா கடற்கரை, கர்நாடகாவிலுள்ள காசர்கோடு கடற்கரை, கர்நாடகாவிலுள்ள படுபிர்டி கடற்கரை, கேரளாவிலுள்ள கப்பாடு கடற்கரை, ஆந்திராவிலுள்ள ருஷிகொண்டா கடற்கரை மற்றும் அந்தமானிலுள்ள ராதாநகர் ஆகியவைதான் அந்த மதிப்புமிக்க சான்றிதழைப் பெற்ற கடற்கரைகள்.
இந்தப் பட்டியலில், தமிழகத்தில் இருந்து ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த 8 கடற்கரைகளில் 5 கடற்கரைகள் அரபிக் கடலில் உள்ளன.
மொத்தம் 33 அம்சங்களைப் பூர்த்திசெய்யும் கடற்கரைகளுக்கே இந்த சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, சுற்றுச்சூழல், கல்வி, பாதுகாப்பு, அணுகல் ஆகியவை தொடர்பானதுதான் அந்த அம்சங்கள்.