தமிழ்நாட்டில் இன்று 30 மாவட்டங்களில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 345 பேருக்கு பாதிப்பு…

Must read

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 345, செங்கல்பட்டில் 126, திருவள்ளூரில் 32 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 55, கன்னியாகுமரி 44, திருநெல்வேலி 19, மதுரை 17, திருச்சி 13, ராணிப்பேட்டை மற்றும் தூத்துக்குடியில் தலா 12 பேருக்கும், வேலூரில் 11 பேருக்கும்

தேனி மற்றும் விருதுநகரில் தலா 9 பேருக்கும், சேலத்தில் 7 பேருக்கும்

சிவகங்கை மற்றும் திருவண்ணாமலையில் தலா 6 பேருக்கும் நாமக்கல்லில் 5 பேருக்கும் ஈரோடு மற்றும் நீலகிரியில் தலா 4 பேருக்கும்

கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூரில் தலா 3 பேருக்கும், மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் தலா 2 பேருக்கும்

கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், தென்காசி, தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மொத்தம் 20,227 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 419 ஆண்கள் 352 பெண்கள் என மொத்தம் 771 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

459 பேர் இன்று குணமடைந்த நிலையில் 4678 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

More articles

Latest article