டெல்லி: “2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அதுதான் எனது இலக்கு” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரான்ஸ் அதிபர் மெக்ரான், வெளிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் குடியரசு தினப் பரிசாக 2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
75வது குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அணிவகுப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து, அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 2030 ஆம் ஆண்டளவில், நாட்டில் 30,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் எதிர்பார்க்கிறது என்று கூறினார். “இது மிகவும் லட்சியமான இலக்கு, ஆனால் அதைச் செய்ய நான் உறுதியாக இருக்கிறேன்,”
பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும் சர்வதேச வகுப்புகளை பிரான்ஸ் தொடங்கும் என்றும்,
“நாங்கள் பிரெஞ்ச் மொழியைக் கற்றுக்கொள்வதற்கான புதிய மையங்களுடன், அலையன்ஸ் ஃப்ரான்சாய்ஸ் நெட்வொர்க்கை உருவாக்குகிறோம்,” என்றும் கூறியுள்ளார்.
“நாங்கள் சர்வதேச வகுப்புகளை உருவாக்குகிறோம், இது பிரெஞ்சு மொழி பேசத் தெரியாத மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளதடன், “பிரான்சில் படித்த எந்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா நடைமுறையை எளிதாக்குவோம் என தெரிவித்து உள்ளார்.
மேலும் ஒரு X வளைதள பதிவில், மேக்ரோஸ், “என் அன்பு நண்பர் @நரேந்திர மோடி, இந்திய மக்களே, உங்கள் குடியரசு தினத்தில் எனது அன்பான வாழ்த்துக்கள். உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும். கொண்டாடுவோம்!”
ஜூலை 2023 இல் பிரான்சின் தேசிய தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜயம் செய்த பின்னர் இது பரஸ்பர பரிமாற்றத்தைக் குறிக்கிறது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான மூலோபாய கூட்டுறவின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்தில் மக்ரோனின் வருகை முடிவடைகிறது.
முன்னதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு இந்தியா வந்த , பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ராக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு வந்த மெக்ரானை அன்று மாலை 5:30 மணிக்கு பிரான்ஸ் அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி, இரு தலைவர்களும் ஜந்தர் மந்தர், ஹவா மஹால் மற்றும் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உட்பட நகரின் பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டனர். மேலும் ரோட் ஷோவிலும் கலந்துகொண்டனர்.
இதுமட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் டொமைன், பாதுகாப்பு, வர்த்தகம், தூய்மையான எரிசக்தி, இளைஞர் பரிமாற்றம், இந்திய மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், இந்தியாவின் முன்மொழியப்பட்ட 26 ரஃபேல்-எம் (கடல் பதிப்பு) போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது பிரதமர் மோடிக்கும் மேக்ரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையிலும், மத்திய கிழக்கு, உக்ரைன் மற்றும் இந்தோ-பசிபிக் ஆகிய நாடுகளின் நிலைமை குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.